தேனி மாவட்டம், சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இந்த வாழை சாகுபடியில் நேந்திரம், செவ்வாழை, நாளிபூவன், உள்ளிட்ட வாழை விவசாயமானது, சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நடைபெறுகின்றது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதம் இந்நிலையில் உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டி, இராயப்பன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், வாழை மரங்கள் வேரோடு ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.
இது குறித்து வாழை விவசாயி அசோக், 'தற்போது நிலவி வரும் 144 தடை உத்தரவு காரணமாக விளைபொருட்களை அண்டை மாநிலமான கேரளாவுக்கும், தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையால், வாழைத்தார்கள் பெருமளவில் விளைநிலத்தில் தேங்கியுள்ளது. இதனால், ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது.
பேட்டி: அசோக், வாழை விவசாயி, இராயப்பன்பட்டி. இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து நாசமானது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளோம். எனவே, தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி, வரும் பேரிடர் நிவாரண நிதி போல், விவசாயிகள் பாதிப்பிற்கும் நிதி வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவால் குஜராத்தில் அதிக உயிரிழப்பு - காரணத்தை கண்டறிய ஆராய்ச்சி