தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'3ஜி வேண்டாம் 4ஜி சேவைதான் வேண்டும்': நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டம் - சரிவர இயங்காத பயோமெட்ரிக் முறை

தேனி: நியாய விலைக்கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ration shop workers protest
vration shop workers protest

By

Published : Dec 26, 2020, 6:58 PM IST

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பயோ மெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 3ஜி இணையதள வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், பயோ மெட்ரிக் முறையில், சரியாக கைரேகை பதிவாகமலும், 3ஜி இணையதள சேவை சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர்களிடையே மோதல் உருவாகும் சூழல் கூட ஏற்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாகளில் உள்ள நியாய விலைக்கடை பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை முனைய இயந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3ஜி மோடத்திற்கு பதிலாக 4ஜி இணைப்புடன் கூடிய மோடம், புதிய கை ரேகை இயந்திரம் வழங்குமாறு வட்ட வழங்கள் அலுவலர் ரத்தினம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கேரளாவில் காதல் திருமணம் முடித்த இளைஞர் வெட்டிக்கொலை.. ஆணவக் கொலையா என விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details