தேனி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசியை, விற்பனைக்காக கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர் கதையாகவே உள்ளது. இதனை கட்டுப்படுத்த எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது - அரிசி கடத்தல்
தேனி: கேரளாவிற்கு கடத்தயிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரேஷன் கடை ஊழியர் உள்பட இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் அம்மச்சியாபுரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த நியாய விலைக்கடையில், ரேஷன் அரிசியை மாவாக தயார் செய்து கால்நடைத் தீவனமாக கேரளாவில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ அரிசியை கைப்பற்றினர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் புதிவு செய்த உத்தமபாளையம் குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர், ரேஷன் கடை ஊழியர் அசோக்குமார், ஓட்டுநர் காட்டுராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.