தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம் - rajini fans give essential products to sanitary workers

தேனி: 110 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர்.

rajini fans give essential products to sanitary workers
rajini fans give essential products to sanitary workers

By

Published : Apr 17, 2020, 7:00 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர். ஆதரவற்றோர், பழங்குடியினர், வறுமையில் வாடுபவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்தனர்.

இதற்கிடையே தன்னார்வலர்கள் நேரடியாக உதவுவதற்கு அரசு விதித்த தடையை நீதிமன்றம் சமீபத்தில் நீக்கியது. இந்நிலையில், தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

தேனி வள்ளிநகர் பகுதியில் 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தேனி அல்லிநகரம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய தூய்மை பணியாளர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details