தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் பருவ மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - public is happy

தேனி: நீண்ட நாட்களுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி

By

Published : Aug 8, 2019, 12:52 PM IST

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருவதால் இடுக்கி, எர்ணாகுளம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது.

தமிழக – கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்துவருகிறது. கூடலூர், கம்பம், உத்தமபாளைம், சின்னமனூர், வீரபாண்டி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது.

தேனியில் சாரல்மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி!

போதிய மழையில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவுப்பணிகள் இனி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பருவ மழை பெய்ததால், தேனி மாவட்ட பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details