தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தேனி வரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்று, மதுரையிலிருந்து தேனி வரை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போடிநாயக்கனூர் வரை 2-ம் கட்டமாக ரயில்வே பாதை திட்டத்தில், ரயில் நிலையம் மற்றும் ரயில் செல்லும் வழியில் அமைந்துள்ள 2 ரயில்வே கேட்டுகள் ஆகியவை உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவற்றை இன்று (நவ.24) தெற்கு ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம் பூரணன் சிக்னல்கள் நிறுவப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
முதற் கட்ட பணியாக தேனியில் இருந்து போடி வரை சுமார் 16 கி.மீ உள்ள மூன்று கேட் சிக்னல்கள் மற்றும் ஸ்டேஷன் அருகிலுள்ள சிக்னல் பாயிண்ட்களில் ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து ரயில் என்ஜின் போடி ரயில்வே நிலையம் வரை வந்தது.