அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தேனியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதில் தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் மேடை சரிந்தது: சீரமைப்பு பணி தீவிரம்! - மக்களவை தேர்தல்
தேனி: ராகுல் காந்தி இன்று பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததையடுத்து, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
Rahul gandhi elction meeting stage roof damage in theni
ராகுலின் வருகையையொட்டி தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி-பெரியகுளம் புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்குஅருகே பொதுக்கூட்டத்திற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும்போது மேடையின் மேற்கூரை நேற்று மாலை சரிந்து விழுந்தது. இதில் பணியாளர்கள், அலுவலர்கள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மேடையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.