தமிழ்நாடு

tamil nadu

காவல்துறையினர் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : May 2, 2020, 3:21 PM IST

தேனி: காவல் துறையினர் தாக்கியதாக கூறி கைலாசப்பட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
காவல்துறையினர் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

கரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தவும், சமூக பரவல் ஏற்படுவதை தவிர்த்திடவும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நோயின் வீரியத்தை உணராத சிலர் வீட்டை விட்டு பொதுவெளியில் கூடி வருகின்றனர்.

இதனால் காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பொது மக்கள் வெளியில் கூடுவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி காலனி பகுதி மக்கள் பொதுவெளியில் கூடி மரத்தடியில் பேசிக்கொண்டு அமர்ந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர்களை கண்டதும் வெளியில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் ஓடி மறைந்துள்ளனர். இதில் மறைந்தவர்களை வீடு புகுந்து காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கைலாசபட்டி சாலையில் முள்செடிகளை வெட்டி போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: அனுமதியை மீறி பயணம் செய்தவர்களுக்கு கரோனா பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details