கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல், தனிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மருந்து பொருட்களின் கடைகள் செயல்பட மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட, மாநில எல்லைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் - தேனி மாவட்ட எல்லையான பரசுராமபுரம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளனர். இரு மாவட்ட எல்லைகளிலும் அத்தியாவசியம் இல்லாமல் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.