தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான கருவி வழங்கல்! - Breath Analyzer

தேனியில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் பகுப்பாய்வு கருவி உள்பட உடையுடன் கூடிய கேமராக்களை காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான கருவி வழங்கல்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான கருவி வழங்கல்

By

Published : Dec 17, 2020, 3:46 PM IST

தேனி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பணிகளின் போது ஏற்படும் பிரச்னைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு உடையுடன் கூடிய கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி இன்று (டிச.17) காவல்துறையினருக்கு வழங்கினார்.

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை எளிதாக கண்டறிய சுவாச பகுப்பாய்வு கருவி (Breath Analyzer) மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டும், பொய் குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும், வீடியோ கேமராக்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் மாவட்டத்தில் பணிபுரியும் ஐந்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான கருவியை வழங்கும் காட்சி

இது தவிர இரவு ரோந்து மற்றும் போக்குவரத்து பணியின் போது ஒளிரும் தோள்பட்டை ஒளிவிளக்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஒலிபெருக்கி (Mega Phone) ஆகிய பொருள்கள் உள்ளடங்கிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், சங்கரன் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:460 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கிய அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details