தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் உள்ளது. ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருவதால், ஆண்டின் எல்லா நாட்களிலும் இந்த அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையினால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியிலிருந்து சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.