தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசவ வலியால் துடித்த பெண்: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை! - பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி

தேனி: ஆண்டிபட்டியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே அவசர ஊர்தியில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவ வலியால் துடித்த பெண்
பிரசவ வலியால் துடித்த பெண்

By

Published : Feb 9, 2021, 6:40 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா புள்ளிமான் கோம்பை அருகே உள்ள கோட்டார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பையா. இவரது மனைவி கெங்கையம்மாள் (27). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று (பிப்.09) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது கணவர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அவசர ஊர்தியின் மூலம் கெங்கையம்மாளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியிலேயே அப்பெண்ணிற்கு வலி அதிகமாக, வாகனத்திலேயே மருத்துவ நிபுணர் தங்கபாபு பிரசவம் பார்த்தார். இதில், கெங்கையம்மாளுக்கு சுகப் பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

‌இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு தாய், குழந்தை இருவரையும் அனுமதித்தனர். தக்க சமயத்தில் தாயையும், குழந்தையும் காப்பாற்றிய அவசர ஊர்தி ஓட்டுநர் பிரபு, மருத்துவ நிபுணர் தங்கபாபு ஆகியோரை பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: 270 கி.மீ தூரம்...மூன்று மணி நேரம்...அசர வைத்த ஆம்புலனஸ் டிரைவர்...திக்திக் நிமிடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details