தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்களிடம் சோதனை செய்தனர்.
இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது - தேனி மாவட்ட செய்திகள்
தேனி: பெரியகுளம் அருகே கஞ்சா கடத்திய இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
அப்போது அவர்களிடம் இருந்த பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மூலக்கடையைச் சேர்ந்த சிவக்குமார் (36), சின்னன் (37) எனவும், வருசநாட்டில் இருந்து வத்தலகுண்டு பகுதிக்கு கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.