தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன், ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி(23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான இவர் அவ்வப்பொழுது வீட்டில் தாய், தந்தையரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.
நேற்று (டிச.12) மாலையும் பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் இன்று வீட்டில் இருந்த தாய் ஜோதியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், தாய் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியைக் கொண்டு தாய் ஜோதியின் தலையில் பலமாக தாக்கியதால், ரத்த வெள்ளத்தில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் இச்சம்பவம் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், தலையில் கோடாரியால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக ஜோதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மது போதைக்கு அடிமையான மகன் தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற மருதுபாண்டியை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தன்னை விரட்டச் சென்ற மக்களை திருப்பி துரத்திய காட்டு யானை!