தேனி:உத்தமபாளையம் அருகேவுள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று பள்ளி விடுமுறை என்பதால் ஊரின் அருகே உள்ள அங்கன்வாடி மையம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை அழைத்துள்ளார்.
சிறுமியும் அந்நபர் அருகே சென்றதும் அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி தன்னை இறக்கி விடுமாறு கூச்சலிடத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்நபர் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீ வைத்தார்.
காட்டன் உடை அணிந்திருந்ததால் தி மளமளவென பற்றி எரிந்தது. இதனை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்த வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.