தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார் - ஓ.பி.ஆர். - தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார்

தேனி: இந்தியாவை வலிமையான இடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வலிமையான இடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஓ.பி.ஆர்.
இந்தியாவை வலிமையான இடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஓ.பி.ஆர்.

By

Published : Feb 25, 2020, 6:40 PM IST

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கலந்துகொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் பாதிப்பு ஏற்படாது. உலக நாடுகள் அனைத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நமது இந்தியாவை பாதுகாக்கும் விதமாக பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம் இதுவரை எந்த ஒரு குடிமகனுக்காவது பாதிப்பு ஏற்படுத்தும் என்று நிரூபிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “ திமுகவும் காங்கிரசும் இணைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதுபோல் அன்றைக்கு மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை எதிர்த்து ஏன் போராடவில்லை. மத்திய அரசுக்கு ஏன் அழுத்தம் தரவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்

ABOUT THE AUTHOR

...view details