தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மற்றும் கும்பகோணத்தில் உள்ள PFI அலுவலகங்களுக்கு சீல் - அலுவலகம் மற்றும் அதன் கிளைகளுக்கு சீல்

தேனி மற்றும் கும்பகோணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கீழ் செயல்பட்ட அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 3, 2022, 9:58 AM IST

தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கீழ் செயல்பட்ட அறிவகம் மதரஸா பள்ளிக்கு நேற்று முன்தினம் (அக்.1) தேனி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதேபோல, கும்பகோணத்தில் செயல்பட்ட இவ்வமைப்பின் கிளை அலுவலகத்தை கும்பகோணம் கோட்டாட்சியர் லதா மற்றும் டிஎஸ்பி அசோகன் ஆகியோர் சீல் வைத்தனர்.

முன்னதாக, இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் NIA அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 106 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, நாடெங்கும் உள்ள இவ்வமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு வேலை இல்லை - திருமாவளவன் எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details