தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ட்ரோல் பண்ணுங்க..! தெருநாய்களுடன் சென்று இந்து எழுச்சி முன்னணியினர் மனு!

தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி, தேனி நகராட்சி அலுவலகத்திற்கு நூதனமாக நாய்களுடன் சென்று இந்து எழுச்சி முன்னணியினர் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 30, 2022, 6:58 PM IST

Updated : Dec 1, 2022, 8:30 AM IST

தேனி:தேனி நகராட்சி பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறி, நகராட்சி அலுவலகத்திற்கு இந்து எழுச்சி முன்னணியினர் நாய்களை தூக்கி சென்று நகராட்சி ஆணையரிடம் இன்று (நவ.30) கோரிக்கை மனு அளித்தனர்.

தேனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1000 மேற்பட்டோர் நாய் கடித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சாலைகளில் நாய்கள் குறுக்கே வருவதால் வாகன விபத்தும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கண்ட்ரோல் பண்ணுங்க! தெருநாய்களுடன் சென்று இந்து முன்னணியினர் மனு..

இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இன்னல்கள் வருவதாகக் கூறி, நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி, தேனி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி: யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி!

Last Updated : Dec 1, 2022, 8:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details