பெட்ரோல், டீசல் வரி அதிகரித்துள்ளதால் நாளுக்கு நாள் எரிபொருள்கள் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவரணி சார்பாக நேற்று பெட்ரோலுக்கு கடன் வழங்குமாறு வங்கியில் சென்று மனு வழங்கியுள்ளனர்.
தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில், "கல்விக்கடன், வாகனக்கடன் வழங்குவதுபோல் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கும், சமையல் எரிவாயு வாங்குவதற்கும் வங்கிக்கடன் வழங்க வேண்டும்" என வங்கி மேலாளரிடம் மனு அளித்துச் சென்றனர்.
வங்கியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவரணி மனு விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்காக வங்கி கடன் வழங்க வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் மனு அளித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
இதையும் படிங்க:ஏ.சி. சண்முகம் விடுத்த 'அந்த' கோரிக்கை: 'உங்களில் ஒருவனாக இருந்து நான்...!' - ஓபிஎஸ் பதில்