தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு – காவல் கண்காணிப்பாளரிடம் விசிக புகார் - theni district allinagaram

தேனி: ஃபேஸ்புக்கில் அம்பேத்கரை இழிவாகப் பேசியவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளரிடம் விசிக மனு
காவல் கண்காணிப்பாளரிடம் விசிக மனு

By

Published : May 9, 2020, 5:13 PM IST

தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று (மே-9) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்முருகன் என்ற வசுமித்ரா. தற்போது சென்னையில் வசிக்கும் இவர், கடந்த மே 4ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் குறித்து தனது முகநூலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். இச்செயல் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் உயர்வாக போற்றக்கூடிய மறைந்த தலைவர்களை திட்டமிட்டு அவமதிப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிந்திருந்தும், இந்திய அரசியல் அமைப்பின் தந்தையும், சட்டமேதையான டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதிப்பு செய்தால் சமூகம் பதட்டம் உருவாகும் என்பதையும் தெரிந்தே திட்டமிட்டு வடிவேல்முருகன் என்ற வசுமித்ரா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். எனவே அவரை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தொடரும் மது பாட்டில்கள் திருட்டு: உஷாராகும் மதுக்கடை உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details