தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Theni: நெல் மூட்டைகளுக்கு ரூ.10 கமிஷன் கேட்கும் திமுக நிர்வாகி? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? - விவசாயிகள் குற்றச்சாட்டு

கடந்த 20 நாள்களாக நெல் மூட்டைகளுக்கு கமிஷன் கேட்டு திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் என்பவர் கொள்முதல் நிலையத்தை திறக்கவிடாமல் தடுத்து வருவதாக நெல் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 24, 2023, 8:12 PM IST

நெல் மூட்டைகளுக்கு ரூ.10 கமிஷன் அடிக்கும் திமுக நிர்வாகி - வேதனையில் விவசாயிகள்

தேனி:பெரியகுளம் அருகேவுள்ள மேல்மங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுக்கு ரூ.10 கமிஷன் கேட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்தனர். இந்த நிலையில், தற்பொழுது கடந்த 20 நாட்களாக அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நெல் கொள்முதல் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடும் தனிநபர்: கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் அரசு இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வது வழக்கம். இதனிடையே, இந்த ஆண்டு ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் என்பவர் தலையிட்டு விவசாயிகள் நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் கொண்டுவரும் விவசாயிகளிடம் நெல் மூடைக்கு பத்து ரூபாய் வரை கமிஷன் கேட்டு தொல்லை அளித்து தருவதாக கூறப்படுகிறது. மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை திறந்த கொள்முதல் நிலையத்திற்குள் அனுமதிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும், வேளாண் அதிகாரிகளும் என்ன செய்கின்றனர்?:எனவே, கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நெல் மூட்டைகள் அனைத்தும் இந்த மழையில் நனைந்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவற்றைக் கொட்டி வைக்க இடம் இல்லாத நிலையில் அறுவடை செய்யப்படாமல் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெல் முழுவதும் விளை நிலத்திலேயே சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆளும் கட்சி பிரமுகரின் தலையிட்டால் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆகவே, ஆளுங்கட்சியினரின் இத்தைகைய அராஜகப் போக்கை மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறை அதிகாரிகளும் தடுத்து நிறுத்துவதோடு, மழையில் பாழாகும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வரும் திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நெல் கொள்முதலை தடுக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை தேவை: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயியான முருகன், 'திமுகவின் நியமன எம்எல்ஏ-வாக உள்ளதாகவும், எம்எல்ஏ நான் சொல்வதைத்தான் கேட்பார் என்றும் கிராம மக்களிடம் மிரட்டும் விதமாக பேசி வருவதாக தெரிவித்தார். மேலும், 15 வருடமாக அதிமுக கமிஷன் வாங்கியிருப்பார்கள் அதே போல, திமுகவினர் 2 வருடமாக இருக்கும் நிலையில், எங்களுக்கு ஏதாவது கமிஷன் தர வேண்டும் என்று கூறி பிரச்னை செய்து வருகின்றார் என்று முருகன் தெரிவித்துள்ளார். ஆகவே, அவர் மீது அக்கட்சி தலைமையும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனெ தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்:15 நாட்களாக வயலிலிருந்து கொள்முதல் நிலையத்திற்கு நெல்கள் கொண்டு வந்தபோதும், இன்னும் 500 ஏக்கர் நெல்கள் அறுவடைக்குஇ தயாராக உள்ளன. இந்த நிலையில், மழைக்காலம் என்பதால் நெல்களை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே, கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வருபவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, நெல்களை கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயி முருகன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்!

ABOUT THE AUTHOR

...view details