தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குள்பட்ட தண்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி கோயில் தெரு. இந்தத் தெருவில் பெரும்பாலானோர் தோட்டங்களில் இரவுக் காவல் பணிக்குச் செல்வதுன்டு. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியிலுள்ள அடுத்தடுத்த மூன்று வீடுகளின் பூட்டுகளை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து திருடியுள்ளனர்.
அடுத்தடுத்த 3 வீடுகளில் நகைகள் கொள்ளை! - மூன்று வீடுகளில் திருட்டு
தேனி: பெரியகுளம் அருகே அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
periyakulam_continuous_house_theft
சிங்கராஜா, லட்சுமியம்மாள், ஜோதி ஆகிய மூன்று பேரின் வீடுகளிலுள்ள பீரோக்களை உடைத்து அந்நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மொத்தமாக இரண்டு சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், செல்போன் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்,
இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல் துறையினர், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீடுகளில் ஆய்வுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.