தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதிநிறுவன உரிமையாளர் இல்லத்தை முற்றுகையிட்டு சமையல் செய்த மக்கள்! - 80 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி

தேனி: உத்தமபாளையத்தில் முதலீட்டு தொகையை உடனடியாக திருப்பித் தரும்படி தனியார் நிதிநிறுவன உரிமையாளரின் இல்லத்தில் சமையல் செய்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

people protest
people protest

By

Published : Oct 31, 2020, 9:17 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உதயம் பைனான்ஸ் மற்றும் உதயநிலா சிட்ஸ்(பி) லிட் என்ற நிதி நிறுவனங்கள் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தன.

மாதாந்திர சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பலவகை திட்டங்களின் கீழ் செயல்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 80 கோடி ரூபாய்க்கும் மேல் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதன் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டாளியாக செயல்பட்டு வந்த அஜீஸ்கான் கடந்த ஜூலை மாதம் இறந்து விடவே அதன் பங்குதாரரான ஜமால்தீன் பொதுமக்களின் வைப்பபுத் தொகையை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் இவ்வழக்கை திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று (அக்.31) காலை திடீரென பணம் போட்ட முதலீட்டாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி உதயநிலா நிறுவனத்தின் உரிமையாளர் இறந்த அஜீஸ்கான் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு மற்றும் உத்தமபாளையம் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிதிநிறுவன உரிமையாளர் இல்லம் முற்றுகை

இதையும் படிங்க:பாலியல் குற்றங்களைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details