தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பிரச்னை - ஆண்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேனி: முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

protest

By

Published : Jul 16, 2019, 8:40 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் ஊராட்சி, பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு குழாய் இணைப்பின் கடைசி பகுதியில் இருப்பதால் பம்பிங் செய்யப்படும் குடிநீர் ஏத்தக்கோவில் பகுதிக்கு சென்றடைவதில்லை. இதனால் போர்வெல் மூலம் கிடைக்கும் நீரை மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்த நீரும் கிராமத்தின் அனைத்து பகுதியிலும் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

குடிநீர் பிரச்னை - ஆண்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

இதனை சரி செய்ய வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், முறையான நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்கையிட்டனர்.

அலுவலக நுழைவாயிலில் காலிக்குடங்களை தலையில் வைத்தவாறு தரையில் அமர்ந்து குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரன், ஊராட்சி உதவி இயக்குனர் முருகன், ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் ஆகியோர் விரைவில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details