தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவிக்குழுவின் பெயரில் ரூ.2 கோடி மோசடி: துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தேனி: பெரியகுளம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயரில் 2 கோடி ரூபாய் வரை வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க்கோரி துணை ஆட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.

துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

By

Published : Dec 25, 2020, 5:26 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேவுள்ள வடுகபட்டியில் ராஜ்குமார் என்பவரால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ‘இமை தொண்டு நிறுவனம்’ நடத்தப்பட்டு வந்தன. பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர்களுக்கு சுய உதவிக்குழு ஏற்படுத்தி வங்கியில் கடன் பெற்றுத் தரும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது.

மோசடி செய்த தொண்டு நிறுவணம்:

கடந்த 2018ஆம் ஆண்டு மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குழுக்களின் பெயரில் இந்நிறுவனம் வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதனை சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு வழங்காமல் இருந்துள்ளன. இந்நிலையில், வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு குழுக்களில் உறுப்பினராகவுள்ள பெண்களுக்கு வழக்குறைஞர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனைப்பெற்ற பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள், பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளித்திருந்தனர்.

துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை:

ஆனால், தற்போது வரை காவல் துறை தரப்பிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பெரியகுளம் துணை ஆட்சியர் அலுவலகத்தை இன்று (டிச.25) பெண்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்து அலுவலகத்திற்கு வந்த துணை ஆட்சியர், பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மோசடியில் ஈடுபட்டவர் குறித்து மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து பெண்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், “வாங்காத கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து செலுத்தச் சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும். மோசடியில் ஈடுபட்டவர் மீது காவல் துறை விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றனர்.

இதையும் படிங்க: 2020இல் சைபர் கிரைம் புகாரில் 62 விழுக்காடு நிதி மோசடி புகார்!

ABOUT THE AUTHOR

...view details