முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தந்து தென் தமிழ்நாட்டின் தாகம் தீர்த்த தந்தையாகக் கருதப்படுபவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இதனால் இவரது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி சமத்துவ பொங்கலாக தேனி மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்த நாளான இன்று பாலார்பட்டி கிராமத்தில் சமத்துவ பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தேவராட்டம், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பச்சை துண்டு தலைப்பாகையுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். அவருடன் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.