தேனி:போடிநாயக்கனூர் மற்றும் மதுரை இடையே பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் பயணிகள் ரயில் சேவையை தொடங்கிவைக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடி- மதுரை இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க:எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தொடர்ந்து ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி முதல் மதுரை இடையேயான முதல் கட்ட அகல ரயில் பாதைப்பணிகள் முடிவு பெற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. மேலும் போடிநாயக்கனூர் - தேனி வரையிலான ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்காக 110 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இதையும் படிங்க:தருமபுரி டூ திருவாரூர் சைக்கிள் பயணம்.. திமுக தொண்டரின் புதிய முயற்சி!