தேனி மாவட்டம்பெரியகுளம் தென்கரையில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் அலுவலகத்தின் முன்பாக இன்று (அக்.2) 153ஆவது காந்தி ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. அப்போது அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி திருவுருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை - Ravindranath MP
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Etv Bharat
அவருடன் தேனி அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் பெரியகுளம் நகர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இனிப்புகளை வழங்கினார்.
இதையும் படிங்க: காமராஜர் நினைவு நாளில் அரசியல் தலைவர்கள் புகழாரம்