தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறில் மீண்டும் படையப்பாவின் அட்டகாசம் ஆரம்பம்! - Padaiyappa is not new to the locals

இடுக்கி: மூணாறில் குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டப் பகுதிகளில் அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையை விரட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

படையப்பாவின் அட்டகாசம் ஆரம்பம்
படையப்பாவின் அட்டகாசம் ஆரம்பம்

By

Published : Apr 20, 2020, 6:59 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வனம் நிறைந்த பகுதியாகும். கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலி காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து வனவிலங்குகள் நாள்தோறும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

படையப்பாவின் அட்டகாசம் ஆரம்பம்

இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் மூணாறில் அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து செல்லும் படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் ஊருக்குள் ஒய்யாரமாக இரவு - பகல் நேரங்களில் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பலரின் விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சூளகிரியில் 13 காட்டு யானைகள் தஞ்சம் - மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details