தேனி:பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மீது உரிமையாளர்களுக்கு அதீத பாசம் இருப்பது வழக்கம். குறிப்பாக வளர்ப்பு நாய்கள் குடும்பத்தில் ஒரு நபராகவே நடத்தப்படுகின்றன. அதற்கு நாய்களின் பாசமும், விசுவாசமும் தான் முக்கிய காரணம். அதுபோல தேனியில் தான் ஆசையாக வளர்த்த நாயை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டிய உரிமையாளர் ஒருவர் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ. 10 ஆயிகம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த போஸ்டர் உள்ளூர் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் வாழைத் தோப்புகளில் காவல் பணிக்காக சிப்பிப்பாறை வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வந்துள்ளார்.