தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி பாலசுப்பிரமணிய கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம் - ஓ பன்னீர்செல்வம்

தேனி பாலசுப்பிரமணிய கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்
புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

By

Published : Jan 1, 2023, 12:42 PM IST

புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

தேனி:2023ஆம் ஆண்டு புத்தாண்டு, உலகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சோழர் காலத்தில் ராஜேந்திர சோழீஸ்வரரால் கட்டப்பட்ட அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது இரண்டு பேரன்களுடன் வழிபாடு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details