தேனி:பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களான புகழேந்தி தலைமையில் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கூறுகையில், "அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தான் பதிவேட்டில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி தீர்மானத்தை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்பு புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஊடகங்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்ததோடு, இதனை உறுதிப்படுத்தியதால் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பதிவேட்டில் உள்ளதை கூறி மகிழ்ச்சி தெரிவித்ததாக" கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இனிமேல் எடப்பாடி பழனிசாமி கொடியை பற்றி பேசினால் பொடி பொடியாகி விடுவார். அதிமுக தொண்டர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டார்கள். கொடநாடு கொலை விஷயமாக ஓபிஎஸ் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் தொடரும் என அறிவித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்.