தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் மாயமான கார் ஓட்டுநர் - பெரியகுளம் தென்கரை காவல் நிலையம்m

தேனியில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் அவரது கார் ஓட்டுநர் தலைமறைவானார்.

Etv Bharatஒபிஎஸ் ஆதரவாளரின் 50 லட்சம் பணத்தை எடுத்து தப்பி சென்ற கார் ஒட்டுநர்
Etv Bharatஒபிஎஸ் ஆதரவாளரின் 50 லட்சம் பணத்தை எடுத்து தப்பி சென்ற கார் ஒட்டுநர்

By

Published : Sep 4, 2022, 11:18 AM IST

Updated : Sep 4, 2022, 1:52 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் முக்கியமானவர். ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர். தேனி மாவட்ட அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவரது கார் ஓட்டுநராக ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று (செப் 3) உசிலம்பட்டியில் இருந்து காரில் பெரியகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது நாராயணன் தனது காரில் ரூ. 50 லட்சம் பணத்தை வைத்திருந்தார். இதனிடையே கார் ஆண்டிபட்டி அருகே சென்ற போது நாராயணன் காரை விட்டு இறங்கினார்.

அதோடு நான் நண்பரின் காரில் வருகிறேன். என்னுடைய காரில் இருக்கும் பணத்தை எனது வீட்டில் கொண்டு சென்று கொடுத்துவிடு என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அதன்படி ஓட்டுநர் ரூ.50 லட்சம் பணத்துடன் தனியாக காரில் புறப்பட்டார். ஆனால் பணத்தை வீட்டில் ஒப்படைக்கவில்லை. இதனால் நாராயணன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீதரின் மனைவி, எனது கணவரை காணவில்லை என்றும், அவரது செல்போன் அணைத்து வைக்கபட்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடகரை காவல் நிலையத்தில் புகார்

இதையும் படிங்க:மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்

Last Updated : Sep 4, 2022, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details