தேனி:அதிமுகவின் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தீர்ப்பு வெளியான நிலையில் தீர்ப்பு குறித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவினர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்; கசப்பு உணர்வுகளை மறந்து கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டுமென கூறினார். இதற்குப் பதில் அளித்துப்பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனையின் பெயரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது ஆதரவாளர் சையது கான், “ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை.