தேனி : சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்க்கமாக தனது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தேனியில் நிர்வாகிகளுடன் மூன்று நாள் ஆலோசனையில் ஈடுபடுவார் தனது ஆதரவாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவசரமாக இன்று காலை அவர் சென்னை திரும்புகிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.