தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிற கட்சியினர் 'அதிமுகவில் இணையும்' நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக கட்சியிலிருந்த 5000-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
"நமக்குப் பொது எதிரி திமுக தான்!"- தேனியில் கர்ஜித்த ஓ.பி.எஸ்! - ammk
தேனி : நமக்குப் பொது எதிரியான திமுகவை அனைவரும் ஒருங்கிணைந்து, 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தி எழுச்சியோடு வெற்றி பெறவேண்டும் என தேனியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இவ்விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , 'இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அண்ணன் தம்பிக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயல்பு தான். அதுபோல பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமமுகவிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து அதிமுகவில் இணைகிறார்கள்.
நமக்கு என்றுமே பொது எதிரி திமுக மட்டுமே. அனைவரும் ஒருங்கிணைந்து 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி எழுச்சியோடு வெற்றி பெறவேண்டும்' என்று தெரிவித்தார்.