தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ரஜினியின் முடிவை வரவேற்கிறேன்’ - துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்! - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி: உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்குவதை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினியின் முடிவை வரவேற்கிறேன் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

‘ரஜினியின் முடிவை வரவேற்கிறேன்’
‘ரஜினியின் முடிவை வரவேற்கிறேன்’

By

Published : Dec 29, 2020, 10:49 PM IST

தேனி மாவட்டம் போடியிலுள்ள தனது அலுவலகத்தில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நடிகர் ரஜினிகாந்த் அவராக தான் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம் என்ற அடிப்படையில் அவரது வரவு நல்வரவாகட்டும் என்று ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்றேன்.

தற்போது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ள ரஜினியின் முடிவையும் வரவேற்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே உயிர் வாழ முடியும். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நலனை பேணி பாதுகாத்திட வேண்டும். அவரது ரசிகர்களை போல நானும் ரஜினி உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினி வழியில் ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் - அர்ஜுன் சம்பத்

ABOUT THE AUTHOR

...view details