தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மூத்த மகனான ஓ.பி. ரவீந்திரநாத் குமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இதையடுத்து தற்போது தேர்தல் முடிவுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.