தேனி:தேனி ஆண்டிப்பட்டி, கடமலை- மயிலை ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக பகுதிகளுக்காக ரூ.162.43 கோடி மதிப்பில் வைகை அணையிலிருந்து புதிய கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, தேனி ஒன்றியங்களுக்கு தற்போது 9.50 மில்லியன் லிட்டர் தண்ணீர்,10 கூட்டுகுடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த 3 ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக குடியிருப்பு பகுதியின் எதிர்கால மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு 1,77,920 பேர் பயனடையும் வகையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வைகை அணையிலிருந்து 163.42 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 10.70 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளன.