தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ லட்சுமி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீ ஆனந்த் நாட்டியாலயா நாட்டிய பள்ளியை சேர்ந்த சுமார் 500 மாணவிகள் அம்மன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த உலக சாதனை முயற்சியில் நான்கு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் சுமார் 500 பேர் ஒன்றிணைந்து, அம்மன் பாடலுக்கு நடனம் ஆடினர். அம்மன் குழந்தை பருவம் முதல் அம்மன் வரை உள்ள பாடல்களுக்கு பரதநாட்டியம் நடனம் ஆடி, டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தால் (divine world book of records) அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தினார்.