தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை - தேனி மாவட்டத்துக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கிய ஓபிஎஸ் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வன்

தேனி: கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 46 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

OPS
OPS

By

Published : Apr 25, 2020, 3:09 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தங்களது சொந்த நிதியில் இருந்து கரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கினர்.

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகம் இருந்த பகுதிகளான போடி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 4 லட்சம் முகக் கவசங்கள, கிருமி நாசின் மருந்து தெளிப்பு வாகனங்களை துணை முதலமைச்சர் வழங்கினார்.

OPS

இதனிடையே, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் வழங்கினார்.

பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் தகுந்த இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details