தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை : மகனை ஆதரித்து ஓபிஎஸ் பரப்புரை

தேனி: என்னை வெற்றி பெறவைத்தால் மத்திய அரசின் திட்டங்களை உங்களது வீடுகள் தோறும் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஓபிஎஸ்

By

Published : Apr 17, 2019, 7:52 AM IST

தழகத்தில் நாளை(ஏப்.18) நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் இறுதி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் இருக்கின்ற 39 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்,

தேர்தலில் வெற்றி பெற்றதும் மத்திய அரசின் திட்டங்களை உங்களது வீடுகள் தோறும் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த இறுதி பரப்புரையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details