தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்   ஆலோசனை - ஓபிஎஸ் ஆலோசனை

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை...!
100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை...!

By

Published : Oct 14, 2022, 11:30 AM IST

தேனி: ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று (அக். 13) ஆலோசனை நடத்தினார்.

100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை...!

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெற்று வரும் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில் நீதிமன்றங்களில் பல்வேறு தீர்ப்புகள் மாறி மாறி வந்துள்ளன. கடந்த ஒரு மாத காலமாக பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு அவருடைய ஆதரவாளர்கள் யாரும் வராமல் இருந்தனர். இந்த நிலையில், நேற்று (அக்.13) திருச்சி நகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திடீர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் மற்றும் புறநகர் பகுதி மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் உள்நாட்டில் உருவானது - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details