தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி வளர்ச்சிப் பணிக்குச் செலவிடப்பட்ட ரூ.433.86 கோடி - ஓபிஎஸ் - கிராம ஊராட்சி மன்றத் தலைவர்

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அடிப்படை மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் ரூ.433.86 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Jan 6, 2021, 6:52 PM IST

தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜன. 06) நடைபெற்றது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் குடிநீர், வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கிராமத்தின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை ரூ.433.86 கோடி மதிப்பிலான அடிப்படை, வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன.

மேலும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அளித்தால் அது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தேனி கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

இக்கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், ஒன்றியக்குழுத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details