தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மூன்று சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவிருக்கும் அரசு சட்டக்கல்லூரியை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
"தேனியில் 38 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட புதிய சட்டக்கல்லூரி" - சொந்த ஊரில் கெத்துகாட்டிய ஓபிஎஸ்! - ஒ.பன்னீர் செல்வம் தேனி சட்டக் கல்லூரி திறப்பு
தேனி: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, புதிதாக அமையவுள்ள அரசு சட்டக்கல்லூரியை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இதற்காக வீரபாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வகுப்புகளை திறந்து வைத்து, பார்வையிட்டனர்.
இக்கல்லூரியில் இந்தாண்டு 160 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் முதற்கட்டமாக 38 மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் அடுத்த கட்ட கலந்தாய்விற்கு முழு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.