தேனி ஒன்றிய திமுக சார்பில் 'எல்லோரும் நம்முடன்' என்ற பெயரில் இனையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமில், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ''தற்போது நடக்கின்ற அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததனால் எனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தேன். ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவில் இணைந்தேன்.
வருகின்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை ஸ்டாலின் எனக்கு வழங்கினார். இன்னும் ஆறு மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்துவிடுவார்.