தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் பஞ்சாப், திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று (மார்ச் 24) இரவு போடிக்கு வந்த இவருக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது.
இதையடுத்து, போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு முதல்கட்டமாக சளி, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. சளி பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி தெரியவந்தது.