தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Onam celebration in Theni: தேனியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு ஓணம் விருந்து நிகழ்ச்சி! - due to Onam festival 2023

ஓணம் பண்டிகையையொட்டி, தேனி மாவட்டம் குமுளியில் நடந்த ஓணம் விருந்து நிகழ்ச்சியில் தமிழர்களும், கேரளாவாழ் மக்களும் இணைந்து பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 5:55 PM IST

Onam celebration

தேனி:தெய்யம், திருச்சூர் பூரம், யுகாதி, கல்பாத்தி ரோல்சவம், புலி காலி, அரண்முலா பாம்பு படகு போட்டி, திருவாதிரை உள்ளிட்ட பல பண்டிகைகள் இருப்பினும் ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றது. 9 நாட்கள் வரையில் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை 10வது நாளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகளில் ஒன்றான 'ஓணம் பண்டிகை' வரும் ஆகஸ்ட் 31ஆம் கொண்டாடப்படுகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் 'ஓணம் விழா' கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடுகள் இன்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவில் வாழும் தமிழர்களும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வருகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் கேரளா மாநிலத்தின் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் 20 அடியில் பூரி ஜெகந்நாதர் சிலை திறப்பு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

அந்த வகையில், தேனி மாவட்டம் குமுளி பகுதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 'ஓணம் விருந்து நிகழ்ச்சி' இன்று (ஆக.26) நடைபெற்றது. குமுளி ஹோட்டல் அசோசியேஷன் தலைவர் ஷாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரியார் புலிகள் சரணாலய இணை இயக்குனர் பட்டேல் சுபாஷ் முன்னிலையில் ஓணம் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓணம் பண்டிகையின் மற்றொரு சிறப்பாக உள்ளது, ஓணம் விருந்து. தலை வாழை இலை போட்டு அதில் 10-க்கும் மேற்பட்ட காய்கறிகள் பரிமாறி மதம் பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக உட்கார்ந்து உணவு அருந்தும் ஓணம் விருந்து நிகழ்ச்சி நடைபெறும். குமுளியில் தனியார் ஹோட்டல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஓணம் விருந்து நிகழ்ச்சியை கொண்டாடினர்.

இதையும் படிங்க: Onam festival 2023: பெரம்பலூர் தனியார் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்.. மாணவிகள் அசத்தல் நடனம்!

ABOUT THE AUTHOR

...view details