மாமனாரிடமிருந்து சொத்துக்களை ஏமாற்றி வாங்கிய காவல்துறை ஆய்வாளர் தேனி:தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் 66 வயது முதியவரான, நேதாஜி. இவர் தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டு, தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி உயிரிழந்ததால் நேதாஜி தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், தனியாக வசித்து வந்த அவரிடம் மூத்த மருமகனான திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் சங்கரேஸ்வரன் மற்றும் அவரது மனைவி முருகேஸ்வரி ஆகிய இருவரும், ‘எங்கள் வீட்டிற்கு வாருங்கள் நாங்கள் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறோம்’ என கூறி அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த போதை ஆசாமி.. இருவருக்கு வெட்டு - பதைபதைக்கும் காட்சிகள்!
அப்போது அவருக்குச் சொந்தமான அனைத்து சொத்து பத்திரங்களையும் எடுத்து வரச் சொல்லியதுடன், வங்கிக்கு அழைத்துச் சென்று அவரது லாக்கரில் இருந்த 50 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 21 பவுன் தங்க நகை மற்றும் அவருடைய வங்கி பாஸ் புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் செக் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நாட்களாகவே தன்னை சரிவர கவனிக்காமல் தனது சொத்தை அவர்களது பெயருக்கு மாற்றி தன்னை துன்புறுத்தியதாகவும், மேலும் தனது இளைய மகள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோதும், அங்கு செல்லக்கூடாது என தன்னை அடைத்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி வந்த முதியவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். தன்னிடம் மோசடியில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்து, தனது ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களைப் பெற்று தருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காதல் ஜோடி தப்பியோட்டம்.. காதலன் குடும்பத்தை கொளுத்திய பெண்வீட்டார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?