தேனி:பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால், அணையின் நீர் மட்டம் 72 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் இன்று (ஆக.1) காலை 8 மணி அளவில் 121 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பெரியகுளம் பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.